தவெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவசர அழைப்பு விடுத்த விஜய்! நாளை சென்னையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம்!

Meiveli Media Team


தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின்  தலைவருமான சி. ஜோசப் விஜய்,  கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை அவசரமாக அழைத்து ஆலோசனைக் கூட்டமொன்றை நடத்தவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கட்சியின் சில சட்டமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்களும் கவனிப்புகளும் எழுந்துள்ள பின்னணியில் இந்த அவசரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, நாளை நவம்பர் 11ஆம் திகதி சென்னையின் பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் கலந்துகொள்ளவுள்ளனர். இதன்போது, சட்டமன்ற உறுப்பினர்களின் அண்மைக்காலச் செயற்பாடுகள், கட்சியின் ஒழுக்க விதிமுறைகள் மற்றும் சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் கலந்துரையாடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆளும் கட்சியாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களிடையே ஒற்றுமையைப் பேணுதல் தொடர்பிலும் விஜய் ஆலோசனைகளை வழங்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. எனினும், கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ள விடயங்கள் மற்றும் எடுக்கப்படவுள்ள தீர்மானங்கள் தொடர்பில் கட்சித் தரப்பிலிருந்து உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.