இரட்டைக் குழந்தைகள் உட்பட மூவர் கொலைச் சம்பவம்: தேடப்பட்ட அச்சினி இலங்கைக்கு அழைத்துவரப்பட்டார்.!!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

பாதாள உலகக் குழு உறுப்பினரான அருண விதானகமகே எனும் ‘மீகஸ் அரே கஜ்ஜா’ மற்றும் அவரது இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த அனுஷா லக்மாலி எனும் ‘அச்சினி’, ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
சர்வதேச பொலிஸாரின் (INTERPOL) சிவப்பு அறிவித்தலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

