யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டி வசூலிப்பு மற்றும் அச்சுறுத்தல் 06 பேர் கைது

Meiveli Media Team


யாழ்ப்பாணம் நகரை அண்டிய பகுதிகளில் பல்வேறு சட்டவிரோத மற்றும் வன்முறைச் செயற்பாடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஆறு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவருக்கு எதிராக நீதிமன்றத்தினால் ஏற்கனவே திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நகரை அண்டிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் குழுவாகச் செயற்பட்டு, பொதுமக்களை அச்சுறுத்தி மீற்றர் வட்டி வசூலித்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகப் பொலிஸாருக்குத் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அத்துடன், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் சென்று, உத்தியோகபூர்வ கியூ.ஆர். முறைமையைப் புறக்கணித்து, ஊழியர்களை அச்சுறுத்தி மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களுக்கு வலுக்கட்டாயமாக எரிபொருள் நிரப்பிச் சென்றுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இன்று வெள்ளிக்கிழமை பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, குறித்த குழுவைச் சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர்,நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்கு முன்னிலையாகாமல் தலைமறைவாக இருந்தமையால், அவர்களுக்கு எதிராகத் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததாகப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர் கைது செய்யப்பட்ட ஆறு பேரும் தற்போது யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுஇ மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">