ஒரு கோடி 48 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடத் தொகுதி திறப்பு விழா. கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பஸ்மின் சரீப்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

தித்வா பேரிடரினால் பாதிக்கப்பட்ட கம்பளை ஸாஹிறா தேசிய பாடசாலைக்கு மத்திய மாகாண கல்வித் திணைக்கனம் மற்றும் யுனோஸ்கோ நிறுவனம் இணைந்து ஒரு கோடி 48 இலட்சம் ரூபா செலவில் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான தற்காலிக இரு கட்டிடத் தொகுதி மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கின்ற நிகழ்வு அதிபர் கெப்டன் எம். ஏ. மஸாஹீர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பஸ்மின் சரீப் அவர்கள் உத்தியோகபூர்வமாகத் திறந்து மாணவர்களின் பாவனைக்காக கையளித்து வைத்தார்.

தித்வா பேரிடரினால் மத்திய மாகாணத்தில் 24 பாடசாலைகள் பாதிக்கப்பட்டன. அதில் கம்பளை வலயத்தில் நான்கு பாடசாலைகள் பாதிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மத்திய மாகாண கல்வித் திணைக்களத்திப் பிரதிக் கல்விப் பணிபாளரும் யுனோஸ்கோ நிறுவனத்தின் இணைப்பாளருமான ஜி.டி. யூ ஜி நிரோசினி, கம்பளை உடபலாத்த பிரதேச செயலகத்தின் திட்டமிடல் அதிகாரி ஊர்ப் பிரமுகர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றன.

