கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலை கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பிக்குகள் அருகில் கூரிய ஆயுதத்துடன் வந்த நபர் கைது!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

கொழும்பு விகாரமகாதேவி பூங்காவுக்கு அருகில், கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி பிக்குகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இடத்திற்கு கூரிய ஆயுதத்துடன் நபர் ஒருவர் இன்று அதிகாலையில் திடீரென வந்துள்ளார்.

அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த மர்ம நபர், உடனடியாக அங்கு பாதுகாப்பிற்காகக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.