ஒரே இடத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள் விபத்துகள் – லொறியின் சக்கரத்தில் சிக்காமல் நூலிழையில் உயிர் தப்பிய சாரதி! இரு விபத்துகளும் CCTV கமராவில் பதிவு!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI


ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் குடாகம பகுதியில் ஒரே நாளில் ஒரே இடத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள் விபத்துகள் இடம்பெற்றுள்ளன.
முதலாவது விபத்து (ஒக்டோபர் 8) பிற்பகல் 1 மணியளவிலும், இரண்டாவது விபத்து பிற்பகல் 3.30 மணியளவிலும் இடம்பெற்றுள்ளது.
இரண்டாவது விபத்தின்போது, மோட்டார் சைக்கிள் சறுக்கி எதிரே வந்த லொறியை நோக்கிச் சென்றதுடன், லொறியின் சக்கரங்களுக்கு மிக அருகில் வீழ்ந்துள்ளது. இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து சாரதி நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். இரு விபத்துகளிலும் சாரதிகள் காயமடைந்துள்ளனர்.
ஒரே இடத்தில் குறுகிய நேர இடைவெளியில் இரண்டு விபத்துகள் இடம்பெற்றுள்ளமை அப்பகுதி மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வீதியைப் பயன்படுத்துவோர் அவதானத்துடன் பயணிப்பதுடன், இப்பகுதியில் விபத்துகளைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">