காந்தி ஜெயந்தி நினைவேந்தல் நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

அகிம்சையின் முன்னோடியான மகாத்மா காந்தியின் 157ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அக்டோபர் 2ஆம் திகதி அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காந்தி ஜெயந்தி நினைவேந்தல் நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்து கொண்டார்.

பிரதமர் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் திரு. சந்தோஷ் ஜா ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது, பிரதமர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோர் மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

மகாத்மா காந்தி தமது வாழ்க்கை மற்றும் தத்துவத்தின் மூலம் உலகிற்கு வழங்‌கிய அமைதி, அகிம்சை மற்றும் நல்லிணக்கம் ஆகிய செய்திகளை நினைவுகூரும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் திரு. சந்தோஷ் ஜா, பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி, அரச அதிகாரிகள் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.