பண்டாரவளை குப்பை மறுசுழற்சி மையத்தில் இரண்டாவது நாளாகவும் தீ விபத்து – புகை காரணமாக பொதுமக்கள் பாதிப்பு

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

பண்டாரவளை குப்பை மறுசுழற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் நீடித்து வருகிறது.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அதிகாரிகள் பலமுறை நடவடிக்கை எடுத்த போதிலும், நிலவும் கடுமையான வறட்சியான காலநிலை மற்றும் குப்பைகளில் உருவாகும் மீத்தேன் வாயு காரணமாக தீ மீண்டும் மீண்டும் பரவி வருகிறது.

இன்றுக் காலை மீண்டும் தீப்பற்றிய நிலையில், அப்பகுதியை சூழ்ந்துள்ள அடர்ந்த புகை காரணமாக சுற்றுவட்டார மக்களுக்கு சுவாசக் கோளாறு மற்றும் அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தீ விபத்து, கிராமப்புற பகுதியிலிருந்து யாரோ ஒருவர் தீ வைத்திருக்கலாம் என்ற சந்தேகமும் அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது, பண்டாரவளை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் மீண்டும் சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.