காத்தான்குடியில் காய்த்துக் குலுங்கும் பேரீச்சை மரங்கள்.
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு காத்தான்குடியிலும் பேரீச்சை மரங்கள் இம்முறை ஏற்பட்டுள்ள கடுமையான வெப்பநிலை காரணமாக அதிகளவில் காய்த்துக் குலுங்குகிறது.
காத்தான்குடி பிராதான வீதியில் தற்போதய பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியினால் நடப்பட்டுள்ள அதிகளவான ஈச்சமரங்களே இவ்வாறு காய்த்து கம்பீரமாக காட்சி தருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகளவில் இந்த பேரீத்தம் மரங்கள் மிகக் கவர்ந்துள்ளது.
காத்தான்குடி நகர சபையின் பராமரிப்பில் இம்மரங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

