நாடு முழுவதும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம்
Meiveli Media Team

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, சுகாதார அதிகாரிகள் சிறப்பு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகளை நாடு முழுவதும் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த விசேட வேலைத்திட்டத்தின் கீழ், பொது சுகாதார பரிசோதகர்கள் வீடுகள், பாடசாலைகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல இடங்களில் விரிவான பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை கண்டறிந்து அவற்றை அகற்றுவதற்கான ஆலோசனைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதுடன், மழைநீர் தேங்கக்கூடிய பாத்திரங்கள், பழைய டயர்கள் மற்றும் பயன்படுத்தப்படாத பொருட்களை உடனடியாக அகற்றுமாறும் சுகாதார அதிகாரிகள் மக்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.அதேவேளை, டெங்கு பரவலுக்கு காரணமாகும் சூழல்களை பராமரிக்கத் தவறும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.டெங்கு நோயை கட்டுப்படுத்துவதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது என்பதால், அனைவரும் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை வாரத்திற்கு குறைந்தபட்சம் முப்பது நிமிடங்கள் ஒதுக்கி பரிசோதிக்குமாறு சுகாதாரத் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

