மீண்டும் ஒன்று சேரும் முதலமைச்சர் விஜய் மற்றும் மனைவி சங்கீதா ; சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி
Meiveli Media Team

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசியலிலும் திரைத்துறையிலும் தற்போதைய மிக முக்கிய பேசுபொருளாக மாறியிருந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தற்போது தம்பதியினர் மீண்டும் ஒரே வீட்டில் இணைந்து வாழத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. முதலமைச்சர் விஜய், கடந்த காலங்களில் தனது அரசியல் மற்றும் சினிமா பயணங்களில் தீவிரமாக இருந்தபோது, அவருக்கும் அவரது மனைவி சங்கீதாவிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக சமூக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் உலா வந்தன. சங்கீதா லண்டனில் தங்கியிருந்ததும், விஜய்யின் முக்கிய பொது நிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் பொதுக்கூட்டங்களில் அவர் கலந்து கொள்ளாததும் வதந்திகள் பரவ காரணாமாகின. இந்நிலையில், இந்த குடும்பப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காண விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் மற்றும் நெருங்கிய குடும்ப உறவுகள் தீவிர முயற்சியில் இறங்கியதாகக் கூறப்படுகிறது. குடும்ப உறவினர்களின் முயற்சியின் பலனாக தற்போது சங்கீதா சென்னை திரும்பயுள்ளதாகவும், இருவரும் தங்களது நீலாங்கரை இல்லத்தில் சேர்ந்து வாழ்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த செய்தி வெளியானதிலிருந்து தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மற்றும் முதலமைச்சர் விஜய் ரசிகர்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

