நீட்’ தேர்வில் இருந்து விலக்கு : நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்
Meiveli Media Team

திட்ட கமிஷனுக்கு பதிலாக ஏற்படுத்தப்பட்ட ‘நிதி ஆயோக்’ அமைப்பின் 11-வது நிர்வாகக் குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் விஜய் Nசினார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளித்து, அனைத்து மருத்துவப் படிப்புகளுக்கும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்த தமிழக அரசுக்கு அனுமதி தர வேண்டும். கோவையில் 2-வது எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும். அதற்கான நிலத்தை மாநில அரசு வழங்கும். இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு உதாரணமாக விளங்கும் திருக்குறளை இந்தியாவின் ‘தேசிய இலக்கியமாக’ அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். நிதி பொறுப்புணர்வு, சமூக முன்னேற்றம், மக்கள்தொகை நிலைநிறுத்தல் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும். மாநில அரசின் ஊரக வீட்டுவசதித் திட்டங்களுக்கும், 100 நாள்வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலைவாய்ப்பு உருவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். சிறப்பான நிர்வாகம், சமூக நீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகிய கொள்கைகளுடன் மத்திய அரசுடன் இணைந்து தமிழகம் ஆக்கப்பூர்வமாகச் செயல்படும் என அவர் பேசினார்.
முதல்வராக பதவியேற்ற பிறகு விஜய் பங்கேற்கும் முதல் நிதி ஆயோக் கூட்டம் இது ஆகும். இந்தக் கூட்டம் முடிந்த பிறகு, பிரதமர் மோடியை, முதல்வர் விஜய் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது தமிழகத்துக்கு தரவேண்டிய நிலுவை நிதியை விரைந்து வழங்க வேண்டும் என்று பிரதமரிடம், அவர் வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகிறது.

