அனுமதிப்பத்திரமின்றி முல்லைத்தீவில் இருந்து யாழ்பாணம் நோக்கி பாரவூர்தியில் முதிரைமரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

அனுமதிப்பத்திரமின்றி முல்லைத்தீவில் இருந்து யாழ்பாணம் நோக்கி பாரவூர்தியில் முதிரைமரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்
சாவகச்சேரி போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய இன்று காலை மீசாலை பகுதியில் வைத்து குறித்த பாரவூர்தியை மறித்து சோதனை செய்ய முற்பட்ட வேளை சாரதி 10 இலட்சம் ரூபா பெறுமதியான 43 முதிரை மரக்குற்றிகளுடன் பாரவூர்தியை கைவிட்டு தப்பிச்சென்ற நிலையில் பாரவூர்தியை கைப்பற்றியதுடன் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.