ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 31 ஆண்டுகால நீண்ட சிறைவாசத்திற்கு பிறகு பேரறிவாளன் வழக்கறிஞராகினார்
Meiveli Media Team

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 31 ஆண்டுகால நீண்ட சிறைவாசத்திற்கு பிறகு விடுதலையான பேரறிவாளன், திங்கட்கிழமை அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தன்னை பதிவு செய்துகொண்டார். சிறையிலிருந்து விடுதலையான பிறகு பேரறிவாளன் குறித்த தகவல்கள் பொதுவெளியில் குறைவாகவே காணப்பட்டன. இந்நிலையில், சிறை மீண்ட பின் முறைப்படி சட்டம் பயின்ற அவர், தற்போது சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில் முறைப்படி பதிவு செய்துள்ளார்.

