நீதிமன்ற உத்தரவின் பேரில் பெருமளவிலான போதைப்பொருள் கையிருப்பு இன்று அழிப்பு

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சுற்றிவளைப்புகளின் போது கைப்பற்றப்பட்ட பெருமளவிலான போதைப்பொருள் கையிருப்பு, இன்று (ஏப்ரல் 27) பகிரங்கமாக அழித்தொழிக்கப்பட்டது.

பலபிட்டிய மற்றும் சிலாபம் ஆகிய கௌரவ நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வந்த வழக்கு நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சட்ட ரீதியான நடைமுறைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

பலபிட்டிய நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திரண மற்றும் சிலாபம் நீதவான் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் முன்னிலையில் இந்தப் போதைப்பொருள் கையிருப்புக்கள் இன்று முறைப்படி அழிக்கப்பட்டன.

போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டிருந்த இந்த சான்றுப் பொருட்கள், நீதிவான்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் பாதுகாப்பான முறையில் அழித்தொழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.