தமிழக அரசியல் தலைவர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் பதாதைகள்
Meiveli Media Team

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் தலைவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான பதாகைகள் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தமிழக சட்டமன்றத் தேர்தல் வியாழக்கிழமை இன்று நடைபெறவுள்ள நிலையில், அனைத்து பரப்புரை நடவடிக்கைகளும் செவ்வாய்க்கிழமை மாலையுடன் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்தன. 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல கட்சிகள் போட்டியிடுகின்றன.
இந்த தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான பதாகைகள் யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்களான யாழ். பொது நூலகம் மற்றும் மாவட்ட செயலகம் போன்ற பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதேவேளை, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் ஆளுங்கட்சியான திமுக ஆகியவற்றுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான தேர்தல் பரப்புரை பதாகைகளும் யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

