சட்டத்தரணி சர்ஜூன் ஜமால்தீன் எழுதிய “இலங்கை ஈஸ்டர் தாக்குதல்கள்: நீதியும் தண்டனையும்” நூல் அறிமுக நிகழ்வு நேற்றைய தினம் (21) கொழும்பில் நடைபெற்றது.

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

‘Equity Publishers’ நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொழும்பு பிரதம தபாலக தலைமையக கேட்போர்கூடத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். ஸுஹைர் தலைமையில் நடைபெற்றது.

குறிப்பாக இந்நூல் ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணி குறித்த பன்முக ஆய்வாக
அமையப்பெற்றுள்ளது.

இந்நூல் அறிமுக விழாவில் அருட்தந்தை மா.சக்திவேல் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

வரவேற்புரையை சட்டத்தரணி ஏ.எம்.ஜிப்ரி நிகழ்த்தினார்.

சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் சிறப்புரை நிகழ்த்தியதுடன் நூலாய்வினை சிராஜ் மஷ்ஹூர் நிகழ்த்தினார்.

பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த அருட்தந்தை மா. சக்திவேல் பிரதம அதிதி உரை நிகழ்த்தினார்.

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். ஸுஹைர் உரையாற்றியதுடன் “இலங்கை ஈஸ்டர் தாக்குதல்கள் நீதியும் தண்டனையும்” அறிமுக நூலின் முதற் பிரதியும் வழங்கி வைக்கப்பட்டது. பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த அருட்தந்தை மா. சக்திவேலிடமிருந்து சிவஸ்ரீ தர்ஷக சர்மா குருக்கள் பெற்றுக்கொண்டார்.

அதிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கும் நூலின் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு நூலாசிரியர் சட்டத்தரணி
சர்ஜூன் ஜமால்தீன் ஏற்புரை நிகழ்த்தினார்.

சிவில் சமூகப்பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டனர்.