அமெரிக்காவிற்கு விரைவில் பதிலடி : ஈரான்
Meiveli Media Team

ஓமான் வளைகுடாவில் ஈரானின் வர்த்தகக் கப்பல்களில் ஒன்று மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதன் மூலம், இரு தரப்புக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறியுள்ளதாக ஈரான் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஈரானின் உயர்மட்ட கூட்டு இராணுவத் தலைமையகமான ஹஸ்ரத் கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகம், அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு விரைவாகப் பதிலடி கொடுப்பதாக உறுதியளித்தது. அமெரிக்க இராணுவத்தின் இந்த ஆயுதமேந்திய கடற்கொள்ளைக்கு எதிராக ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஆயுதப் படைகள் விரைவில் பதிலடி கொடுக்கும் என்று நாங்கள் எச்சரிக்கிறோம் என அந்தப் பேச்சாளர் கூறினார். முன்னதாகஇ அப்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க கடற்படையினர், ஈரானிய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்திற்கான அமெரிக்க முற்றுகையை மீறி ஓமான் வளைகுடாவின் கடல்வழியாகச் செல்ல முயன்றதாகக் கூறப்பட்ட ஈரானியக் கொடி ஏற்றப்பட்ட சரக்குக் கப்பல் ஒன்றை இடைமறித்துக் கைப்பற்றினர்.இக்கப்பல் சீனாவிலிருந்து கடந்த மார்ச் மாதம் புறப்பட்டு ஈரான் சென்றடைய இருந்தாகக் கூறப்படுகிறது.

