கரவெட்டியின் பழைய மாணவர்களால் ஒருங்கிணைக்கப்படும் ‘2025 கோலாகல கோடைவிழா’

ஐக்கிய இராச்சியத்தில் வாழும் ஞானசாரியர் கல்லூரி, கரவெட்டியின் பழைய மாணவர்களால் ஒருங்கிணைக்கப்படும் ‘2025 கோலாகல கோடைவிழா’ எதிர்வரும் ஜூலை 13ஆம் தேதி கிழக்கு லண்டனில் உள்ள Valentines Park, Redbridge, East London என்ற மகவரியில் மிகுந்த உற்சாகத்துடன்இ குடும்பமுழுவதும் மகிழ்வுடன் கழிக்கத்தக்க ஒரு நாள் நிகழ்வாக நடைபெற உள்ளது.

காலத்தால் மாறாத நினைவுகளை மீட்டெடுக்கவும், கல்வியளித்த தாய்க் கல்வியினை கௌரவிக்கவும், பழைய மாணவர்களுக்கிடையிலான ஒற்றுமையை வலுப்படுத்தவும் சமூக உறவுகளை புதுப்பிக்கவும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில்
பாடசாலையின் முன்னாள் ஆசிரியர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் என பலரும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டள்ளனர்.

மேலும், இந்நிகழ்வை சிறப்பிக்க Redbridge கவுன்சிலராகவும், முன்னாள் மேயராகவும் பணியாற்றிய திரு. தவதுரை ஜெயரஞ்சன் அவர்களும், Redbridge பகுதியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களது பங்களிப்பும் உரையாடல்களும், சமூக ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும் என்பதில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

‘பண்பும், பழக்கமும், பெருமையும் கொண்ட பாடசாலையோடு பாசபூர்வமான பிணைப்பை மீட்டெடுக்க,
அனைவரையும் உன்றுகூடுமாறு ஞானசாரியர் கல்லூரி, கரவெட்டி பழைய மாணவர் சங்க ருமு கிளையினர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.