ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்க மற்றும் சுவிஸ் நாடுகளின் தூதுவர்கள் – தமிழ் தேசிய பேரவை உறுப்பினர்கள் சந்திப்பு

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ் தேசிய பேரவையினர் ஐரோப்பிய ஒன்றிய உயர்ஸ்தானிகர், அமெரிக்க மற்றும் சுவிஸ் நாடுகளின் தூதுவர்களுடன் இன்று (20) தூதரங்களில் சந்திப்பு இடம்பெற்றது.

இந்த தூதுவர்களுடனான சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் உதயன் பத்திரிகை உரிமையாளர் ஈ. சரவணபவான், சிரேஸ்ட சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் ஆகியோர் ஐரோப்பிய ஒன்றிய உயர்ஸ்தானிகர் மற்றும் அமெரிக்க தூதரையும் சந்தித்தனர்.

இதனை தொடர்ந்து பிற்பகலில் சுவிட்சர்லாந்து தூதரகத்தில் அந்த நாட்டு தூதுவரை சந்தித்து தமிழ் மக்களுக்கு சமஸ்டியிலான நிரந்தர தீர்வு மற்றும் வடக்கில் தற்போது அரசாங்கம் தமிழ் மக்களின் காணி அபகரிப்பை நிறுத்த வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.

தொடர்ந்தும் இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்…