லண்டனில் வெற்றிகரமாக நடைபெற்ற தமிழர் வர்த்தக சந்தை 2025

பிரித்தானிய தமிழர்  வர்த்தக சம்மேளனம்  கடந்த 11 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வரும் மாபெரும் லண்டன் தமிழ்ச்சந்தை 2025 இவ்வாண்டும் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.

பிரித்தானியாவில் பல தசாப்தங்களாக வணிகத்துறையில் காலூன்றி பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி வரும்  தமிழர்களின் வணிக அமைப்புகளின் மிகப்பெரிய சந்தையாக  இது மாற்றம் அடைந்து வருகின்ற நிலையில் ஏப்பிரல் 5ம் 6ம் திகதிகளில் லண்டன் தமிழச் சந்தை பரபரப்பாக இயங்கி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. மேற்கு லண்டன் ஹரோவில் அமைந்துள்ள லெஷர் வென்ரரின் பெரனன் மண்டபத்தில் இந்த சந்தை கூடியிருந்தது.

இலாப நோக்கமற்ற சமூக ஒருங்கிணைவிற்கான நீண்டகால முயற்சியின் நோக்காக லண்டன் தமிழச்சந்தை கூட்டப்பட்டிருந்தது. 100க்கு மேற்பட்ட வணிகத்திடல்கள் அமைக்ப்பட்டிருந்ததோடு, பொருட்களை கொள்வனவு செய்வதிலும், சேவை அடிப்படையிலான நிறுவனங்ககளோடு  வாடிக்கையாளர்கள் அளவளாவுவதிலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வம் காட்டியிருந்தனர். புதிய பல தொழில் முயற்சிகளும்  அறிமுகமாகி  தம்மை விஸ்தரிக்க  இச்சந்தை களம் அமைத்துள்ளதோடு, தாயகத்தில் தமிழர் பிரதேசங்களில் இருந்தும் நேரடியாக சர்வதேச வர்த்தக வாயப்புக்கைள ஏற்படுத்தும் வகையில்  சில வர்த்தக  நிறுவனங்கள் பங்கேற்றிருந்தன.

இதேவேளை மலேசியா, தமிழகம் போன்ற வர்த்த அமைப்புகக்ளோடு இணைவை ஏற்படுத்தும் திட்டங்களும் இவ்வருடம் பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. அத்தோடு, நேரடி பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் ஆடல் பாடல் நிகழ்வகவுகளும், தாயக புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களின் அறிமுகமும் கௌரவிப்பும் இடம்பெற்றிருந்தது.

தமிழர் வர்த்தக வரிவாக்கத்தை சர்வதேச தரமுயர்த்தலை நோக்கி நகர்த்தவும் வணிக நிறுவனங்களுக்கிடையிலான தொடர்பாடலை ஏற்படுத்தும் நோக்கோடும் வெற்றிகரமாக பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் 11 வது ஆண்டு லண்டன் தமிழ்ச்சந்தை  அன்னுமொரு தடத்தை பதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.