புதிய அரசாங்கம் நாட்டில் சட்டத்தின் ஆட்சியை அழித்து மக்கள், ஊடகங்களை அடக்கி வருகிறது – காரியவசம்

 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒரு ஜனாதிபதி இதுபோன்ற அறிக்கையை வெளியிடுவது ஒருபோதும் பொருத்தமானதல்ல என்று கூறிய காரியவசம், சட்டத்தின்படி ஒருவரை கைதுசெய்ய வேண்டும் என்றும், இது தொடர்பாக அரசியல் மேடையில் ஜனாதிபதியின் அறிக்கை மிகவும் மூன்றாம் தரச் செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் மக்களை ஏமாற்றிவிட்டதை மக்கள் தற்போது உணர்ந்துள்ளதால், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மீண்டும் பொய் சொல்லி மக்களை ஏமாற்றத் தயாராகி வருவதாகவும், நாட்டின் சில பகுதிகளில் கோயில் பிக்குகளுக்கு உணவு வழங்க முடியாத சூழ்நிலை உருவாகி வருவதாகவும் அவர் கூறினார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வர பிரிவினைவாதிகள் உதவினார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் அரசாங்கம் பிரிவினைவாதிகள் விரும்பும் விதத்தில் செயல்படுகிறது.

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலிலும் இதே பொய்யால் மக்கள் ஏமாற்றப்படுவார்கள் என்று தான் நம்பவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்…