தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் 125 வருட பூர்த்தியை கொண்டாடுகிறது.

125 வருட பூர்த்தி இலச்சினை மற்றும் வருடம் முழுவதும் கழகத்தால் முன்னெடுக்கவுள்ள செயற்பாடுகள் பற்றிய அறிவிப்புக்களை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் அதன் போஷகர் சந்திரா ஷாப்டர் மற்றும் கழகத்தின் தலைவர் ரமேஷ் ஷாப்டர் ஆகியோரின் தலைமையில் இன்றைய தினம் பி. சரவணமுத்து மைதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இலங்கையின் பழமையான பெருமைக்குரிய
விளையாட்டு கழகங்களில் ஒன்றான தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் தனது 125 வருட பூர்த்தியை கொண்டாடுகிறது. 1899 டிசம்பர் 2 ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட இக்கழகம் தமது வருட பூர்த்தியை முன்னிட்டே இந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பை கழகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

மேலும் இந்நிகழ்வில் கழகத்தின் முன்னாள் தலைவர் A. கந்தசாமி, போஷகர் சந்திரா ஷாப்டர், உறுப்பினர் டாக்டர் ராஜா சரவணமுத்து, செயலாளர் அனீஸ் பாத்தலிங்கம், ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இவ்வூடக சந்திப்பில் கருத்து தெரிவித்த கழகத் தலைவர்
ரமேஸ் ஷாப்டர்…

இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கழகம் உலகளாவிய ரீதியில் தேசத்தின் கிரிக்கெட் பயணத்தில் ஆழமான பங்களிப்பை வழங்கியுள்ளது. 1943 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பி. சரவணமுத்து மைதானம் இலங்கையில் முதலாவது சகல வசதிகளையும் கொண்ட மைதானமாக திகழ்ந்தது. குறிப்பாக இலங்கையின் முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இங்கிலாந்துக்கு எதிராக 1982 பெப்ரவரி மாதம் பி. சரவணமுத்து மைதானத்தில் நடைபெற்றது.

அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அப்பால் கிரிக்கெட் ஜாம்பவான் சேர் டொனல்ட் பிராட்மன் விளையாடிய ஒரே மைதானமாக இந்த சரவணமுத்து மைதானம் அமைந்துள்ளது. இலங்கையில் முதலாவது டெஸ்ட் வெற்றியை பதிவு செய்த மைதானமாகும் இது அமைந்துள்ளது.

அதன் வரலாற்றில் பரந்தளவு பின்புலன்களைச் சேர்ந்தவர்களிலிருந்து கிரிக்கட் திறைமைசாலிகளளை கட்டியெழுப்புவதில் தமிழ் யூனியன் முக்கிய பங்காற்றியுள்ளது. இந்த கழகத்தின் புகழ்பெற்ற தூதுவராக 133 டெஸ்ட் போட்டிகளில் 880 விக்கட்களை பதிவு செய்த சர்வதேச கிரிக்கட் அரங்கில் முன்னணி விக்கட்கைப் கைப்பற்றிய வீரர் திகழும் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் திறக்கின்றார்
.
இலங்கையின் சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக அறியப்படும் எம். சதாசிவம் இந்த கழகத்தினால் உருவாக்கப்பட்டவர். இவர் சிலோனுக்கு 1945 ஆம் ஆண்டில் முதல் விளையாடினார் இந்தியாவுக்கு எதிராக 111 ஓட்டங்கள் குவித்திருந்தார். 1948ஆம் ஆண்டில் இவர் அவுஸ்திரேலியாவின் டொன் பிராட்மன் தலைமையிலான அணிக்கு எதிராக இலங்கை அணிக்கு தலைமை வகித்திருந்தார். நாட்டினுள் இவர் சிறந்த மற்றும் இறுதி சதம் 1955 ஆம் ஆண்டில் பதிவாகியிருந்தது. கொழும்பில் என் சீ சீ கிரிக்கெட் கழக மைதானத்தில் அரசாங்க சேவைகள் அணிக்கு எதிரான டெஸ்ட் அணி சார்பாக ஆட்டமிழக்காமல் 206 ஓட்டங்கள் குவித்திருந்தார்.

தமிழ் யூனியன் கழகத்தின் விளையாட்டு சிறப்பு கிரிக்கெட் விளையாட்டு அப்பாலானது ஹெக்கி விளையாட்டில் இந்தக் கழகம் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. இலங்கையின் சிறந்த கொக்கி வீரராக அறியப்படும் மயில்வாகனம் தயார்படுத்தியது.

கிரிக்கெட் அப்பால் தமிழ் யூனியன் பரந்தளவில் விளையாட்டு வசதிகள் வழங்கப்படுகின்றன. அவற்றில் நீச்சல், ஸ்கொஷ் டெனிஸ் மற்றும் சகல வசதிகளையும் கொண்ட ஜிம்னாசியம் ஆகியவை அடங்கியுள்ளன. பெண்கள் கிரிக்ட் அணிக்கு அவசியமான பயிற்சி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளும் வழங்குகின்றது. அத்துடன் இங்கு விடுதியில் தங்கி நின்று கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்கின்றது.

கடந்த காலங்களில் ஆர்.பிரேமதாச , காலி, தம்புள்ளை, கண்டி பள்ளேகள ஆகிய மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன. அரசாங்கம் எமது மைதானத்தை கைவிட்டது. இருந்தும் நாங்கள் இம் மைதாணத்தின் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கின்றோம். 1983ல் இம் மைதானம் பாதிக்கப்பட்டது. அருகில் வாழும் வனாத்தமுல்லை வெள்ளப்பெருக்கில் மக்கள் இங்கு ஒரு பகுதியில் தங்கி நிற்பார்கள். அத்துடன் கடந்த கொவிட் காலத்தில் படைகள் இங்கு தரித்து நின்றன. தற்பொழுது நாளாந்தம் பல்வேறு விளையாட்டுகளின் இவ் மைதானம் ஒதுக்கப்பட்டு வருகின்றது.

வெள்ளத்தடுப்பு புனர் நிர்மாணத்தில் 35 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப் பட்டுள்ளது. எமது தமிழ் கழகத்தில் விளையாடிய பல்வேறு சாதனை வீரர்கள் உள்ளனர். இந்த மைதானத்தில் பல சாதனைகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரீ.20, ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு ஏற்றவாறு இம்மைதானம் ஓவல் வடிவில் அழகு படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் அக்டோபர் 31 ஆம் திகதி இவ் மைதான வரலாற்றுப்பதிவுகள் புத்தகவடிவில் வெளியிடப்படவுள்ளதுடன் 125வது வருடத்தை குறிக்கும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக இவ் ஆண்டு முழுதும் நடைபெறுவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில், இந்த வரலாற்று நிகழ்வை பெருமை படுத்தும் முகமாக கிரிக்கெட் ஜாம்பவான் சேர் டொன் பிரட்மனால் கையொப்பமிடப்பட்ட மிகப்பழைமை வாய்ந்த கிரிக்கெட் துடுப்பாட்ட மட்டையொன்றை தமிழ் யூனியன் விளையாட்டுக்கழக தலைவரால் அதன் போஷகரான சந்திரா ஷாப்டருக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.