கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் இரண்டு பேர் கொலை!
15/03/2025 அன்று சுமார் 0450 மணி அளவில், கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் உள்ள வெஹரகொடெல்ல, ஜபோஸ் லேன் பகுதியில் தனிப்பட்ட தகராறொன்றின் காரணமாக இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போதே இக்கொலைச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த மோதலின் தொடர்ச்சியால் எம். யாசிர் (வயது 23) மற்றும் எஸ். மதுசங்க (வயது 23) ஆகியோர் கடுமையான வெட்டுக்காயங்களினால் உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தச் சம்பவத்திற்கு
வெஹரகொடெல்ல பகுதியைச் சேர்ந்த வினோ (24) மற்றும் அபிஷேக் (27) ஆகிய இருவரே தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தை பொலிசார் தெரிவித்துள்ளனர்.