இந்திய கடற்படையின் ‘INS KUTHAR’ போர்க்கப்பலானது உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

 

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS KUTHAR’ போர்க்கப்பலானது உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றைய தினம் (2025 மார்ச் 03) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

இவ்வாறாக கொழும்பு துறைமுகத்திற்கு வந்த Corvette வகைக்கு சொந்தமான ‘INS KUTHAR’ போர்க்கப்பலானது 91.16 மீட்டர் நீளமும் 129 நிர்வாக குழுவினரையும் கொண்டுள்ளதுடன், கப்பலின் கட்டளை அதிகாரியாக கொமாண்டர் Nitin Sharma பணியாற்றுகின்றார்.

இந்த உத்தியோகபூர்வ விஐயத்தின் போது ‘INS KUTHAR’ கப்பலின் கட்டளை அதிகாரி மற்றும் மேற்கு கடற்படை கட்டளை தளபதிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்றதுடன், இந்த போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், கொழும்பு துறைமுகத்தில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்கள்ளைப் பார்வையிட்டு, இரு நாட்டு கடற்படையினரிடையே நட்புறவை மேம்படுத்துவதுடன், பயிற்சிப் பரிமாற்றங்களுக்காகவும் இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு ‘INS KUTHAR’ என்ற போர்க்கப்பல் 2025 மார்ச் 06 ஆம் திகதி தீவை விட்டுப் புறப்பட உள்ளது.