ரணிலை அடுத்து தனக்கே முக்கிய இடம்! ரவி கருணாநாயக்க திட்டவட்டம்

ஐக்கிய தேசியக் கட்சியில் ரணில் விக்ரமசிங்கவுக்குப் பிறகு தானே மிகவும் மூத்த நபர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டில் மின்சாரம் தொடர்பான பாரிய சிக்கல் நிலைகள் தோன்றியுள்ளன.

இதுபோன்ற ஏதாவது நடக்கும்போது, வாரியம் தயாராக இல்லை எனபது இதன்மூலம் வெளிப்படுத்தப்படுகிறது.

ஒரு வாடிக்கையாளர் இரண்டு வாரங்களுக்கு மின் கட்டணத்தை செலுத்தாதபோது, மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

ஆனால் இதுபோன்ற ஏதாவது நடக்கும்போது, யார் பேசுகிறார்கள்?

மேலும், பட்ஜெட்டில் சம்பள அதிகரிப்பு மற்றும் சலுகைகளை வழங்குவது தொடர்பில் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.

எனினும் பொருளாதாரத்தை எவ்வாறு விரிவுபடுத்துவது என்பது பற்றி ஆளும் தரப்பிடம் இருந்து எந்த பேச்சும் இல்லை” என்றார்.