போதைப்பொருள் பயன்படுத்திய 17 காவல்துறை அதிகாரிகள் பணி நீக்கம்!

கடந்த நான்கு மாதங்களில், ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப் பொருட்களைப் பயன்படுத்தியதற்காக இலங்கை காவல்துறை, 17 அதிகாரிகளை பணிநீக்கம் செய்துள்ளது.

போதைப்பொருள் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கை காவல் துறையின் அதிகாரிகளின் பட்டியலைப் புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவு வழங்கியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

 

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசோதனைக்குப்படுத்தப்பட்டு, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபைக்கு மருத்துவ அறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காவல் துறையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

 

இதேபோன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் பல அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மனதுங்க உறுதிப்படுத்தினார்.

 

இந்த விவகாரத்துடன் தொடர்புடைய மூத்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க அறிவுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.