இந்தியா எமது தகவல்களை பெற முயற்சிக்கின்றதா? – ராஜ்குமார் ரஜீவ்காந்த்
Biometrics அடையாள அட்டை தயாரிப்பது தொடர்பாக இந்தியா இலங்கை மக்களில் ஒட்டு மொத்த தகவல்களையும் பெற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருக்கின்றது… என மக்கள் போராட்ட இயக்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்…
இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைப்பின் உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் இது தொடர்பில் தெளிவு படுத்தி கருத்து தெரிவிக்கையில்…
Biometrics அடையாள அட்டை தயாரிப்பது தொடர்பாக இந்தியா இலங்கை மக்களில் ஒட்டு மொத்த தகவல்களையும் பெற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருக்கின்றது. ஓர் இறைமையுள்ள நாடு என்ற அடிப்படையில் இதற்கு அரசு இணங்கக் கூடாது. உலகில் ஜனநாயகம் அற்ற 19 நாடுகளில் மட்டும் உள்ள biometrics அடையாள அட்டை எமக்கு அவசியமற்றது. Digital dataக்களையும் தனிப்பட்ட biometricsஐயும் யாரும் குழுப்பிக்கொள்ள வேண்டாம். இந்த செயற்பாட்டை நாம் முழுமையாக எதிர்ப்போம் அதன் விளைவுகள் தொடர்பாக தொடர்ச்சியாக விழிப்புணர்வுகளைச் செய்வோம். என்றார்…