யாழ். பல்கலையில் தேசிய கொடி இறக்கப்பட்டு கறுப்புக்கொடி ஏற்றப்பட்டு போராட்டம்: வடகிழக்கில் வலுப்பெற்ற கறுப்புக் கொடிப் போராட்டம்.

இலங்கையின் 77வது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் செவ்வாய்கிழமை யாழ்ப்பாணத்தில் கறுப்புக்கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான கொடி கம்பத்தில் பறந்த தேசிய கொடி மாணவர்களால் இறக்கப்பட்டு கறுப்புக் கொடியேற்றப்பட்டது.

பல்கலைகழக சூழலில் கறுப்புக் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தது.இலங்கையின் சுதந்திர தினத்தினை கரி நாளாக அனுஷ்டித்துஇ யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் பல்கலைக்கழக மாணவர்களால் இன்று பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு, பிரகடனமும் வாசிக்கப்பட்டது.

அதேவேளை நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.போராட்டத்தில் சிவகுரு ஆதீனத்தில் ஆதீன குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

மேலும், பல்வேறு அழுத்தங்களுக்குஅச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இலங்கையின் தேசிய சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடகிழக்கு மாகாண வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.கிழக்கு மாகாண வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.