பிரதமருக்கு கற்பிப்பது எனது வேலை அல்ல – மனோ கணேசன் தெரிவிப்பு

நேற்றைய நாடாளுமன்ற அமர்வின்போது, பிரதமர் ஹரினி அமரசூரிய தமக்கு அளித்த பதில் பொருத்தமற்றது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் இன்று கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.க்ளீன் ஸ்ரீலங்கா குறித்து தெளிவான விளக்கமொன்றைத் தர வேண்டும் என தான் நேற்று பிரதமரிடம் விளக்கம் கோரினேன்.அதற்குப் பதிலளித்து உரையாற்றிய பிரதமர். தமக்கு எவரும் கற்பிக்க வரவேண்டிய தேவையில்லை என கூறினார்.

எதிர்க்கட்சியிலிருந்து நாம் விளக்கம் கோரினால் அதற்கு சரியான வகையில் விளக்கமளிக்க வேண்டும்.அவருக்குக் கற்பிப்பது தனது வேலை அல்ல.
இன்னும் பல பணிகள் உள்ளன. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நேரத்தை விரயம் செய்வதாகவும் அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.எது எவ்வாறிருப்பினும், நாங்கள் கடந்த காலங்களில் எதிர்க்கட்சியாக எமது கடமைகளை சரியாக முன்னெடுத்துள்ளோம்.

அவரை அரசியல் நண்பராகக் கருதுகிறேன்.ஆனால் அவர் அவ்வாறு கருதவில்லை போலும் மனோ கணேசனுக்குப் பிரதமரால் சிறந்த பதிலடி கொடுக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் வைரலாக காணொளிகள் பகிரப்படுகின்றன.அது எந்தவகையிலும் ஒரு பதிலடியாக அமையாது.

எனவே, உரிய வகையில் நாடாளுமன்றத்தில் செயற்படுமாறு தாழ்மையுடன் பிரதமரைக் கோருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.இதேவேளை, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான வேதனத்தை அதிகரிப்பதும், அரசியல் கைதிகளை விடுவிப்பதுமே உண்மையான க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டமாக அமையுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.