நாம் தமிழர் கட்சியிலிருந்து  3000 நிர்வாகிகள் விலகி திமுகவில் இணைய திட்டம்.

நாம் தமிழர் கட்சியிலிருந்து தொடர்ந்து ஏராளமான நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பலர் விலகி வருகிறார்கள். சீமான் மீதுள்ள அதிருப்தி காரணமாக ஏராளமான நிர்வாகிகள் விலகி வருவதாக கூறுகிறார்கள்.

சமீபத்தில் கூட சீமான் பெரியார் பற்றி மிகவும் சர்ச்சையாக பேசினார். அதாவது பெரியார் பாலியல் இச்சை வரும் போதெல்லாம் தாய் மகள் மற்றும் சகோதரிகளுடன் உடலுறவு கொள்ளுங்கள் என்று கூறியதாக கூறினார். அதன் பிறகு நேற்று அவருடைய வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் ‌ பெரியார் தாலியை அறுத்து எறியுங்கள் அது பெண்களுக்கு தடையாக இருக்கிறது என்று கூறிய போது அதனை பொது மேடையில் வைத்து திராவிடர்கள் அறுத்து எறிந்தனர். இதேபோன்று கர்ப்பப்பையையும் அறுத்து எறியுங்கள்.‌ பெண்கள் என்ன குழந்தை பெற்றெடுக்கும் இயந்திரமா என்று பெரியார் கூறியதால் அதை செய்யாமல் எதற்காக குழந்தையை பெற்றெடுத்துள்ளீர்கள் என்று கேட்டார்.

சீமான் தொடர்ந்து சர்ச்சையாக பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியிலிருந்து கிட்டத்தட்ட 3000 நிர்வாகிகள் விலகி நாளை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார்கள். மேலும் அதன்படி சீமான் மீது உள்ள அதிருப்தி மற்றும் ‌ அவர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசுவதால் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் மற்றும் கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் உட்பட 3000 நிர்வாகிகள் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைகிறார்கள்.