களுபோவிலையில் துப்பாக்கிச் சூடு! பொலிஸார் விசாரணை

காணொளி இணைப்பு

 

கொழும்பை அண்மித்த களுபோவில பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவமானது இன்று (16) நண்பகல் களுபோவிலை பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றின் அருகில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் எவருக்கும் எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுபோவில மற்றும் தெகிவளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்…