மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண புதிய இயந்திரம்
மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண்பதற்கு யாழ்ப்பல்கலைக்கழக மாணவன் வரதராஜன் டிலக்சன் என்பவரால் புதிய இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நிந்தவூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயின்று யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரிக்கு சென்ற வரதராஜன் டிலக்சன், மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காணும் செயற்திட்டம் (The Brain Tumors Navigation System Project) வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.
இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் (Mechatronic Engineering Technology)பிரிவின் இறுதி ஆண்டு மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.