கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம் மூலம்  யுத்த கறைகளை புதிய அரசாங்கம்போக்க வேண்டும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர்  கோரிக்கை

யுத்தத்தால் அரசாங்கத்தின் கைகளில் இரத்தக் கறை படிந்திருப்பதாக வலியுறுத்தியுள்ள வடக்கின் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் ஒருவர், புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தை அந்த கறைகளை போக்குவதற்காகவும் பயன்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்காவினுடைய அரசாங்கம் நல்லிணக்கம் தொடர்பிலான உரையாடலை இந்த நாட்டில் அதிகம் பேசிக்கொண்டிருக்கிறது. ‘கிளீன் ஸ்ரீலங்கா’ என்ற புதிய ஒரு செயற்றிட்டத்தை இந்த அரசு இந்த நாட்டிலே செயற்படுத்திக்கொண்டிருக்கிறது. ஆனால் அந்த அரசின் கைகள் முழுமையாக இனப்படுகொலையின் காரணமான, ஒரு இனத்தின் மீது வலிந்து திணித்த அந்த போரின் காரணமாக, இரக்கத் கறை படிந்திருக்கிறது.

அதனை அந்த அரசு சுத்தம் செய்வதற்கு முன்வர வேண்டுமென இந்த மாணவர் சமூகமாக நாங்கள் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் மூலம் மக்கள் மனதில் உள்ள வடுக்கள் மற்றும் ரணங்களைக் குறைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிறார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் எஸ். சிவகஜன்.

கிளீன் ஸ்ரீலங்கா எனப்படுவது தனியே சுத்தம், சுகாதாரம், தெருக்களை சுத்தப்படுத்துகிறோம் என்பதில் மாத்திரம் இந்த அரசின் இலக்குகள் அமைந்துவிடக்கூடாது, அது எப்பொழுதுமே மக்களின் மனங்களில் உள்ள ஆதார வடுக்களை, ரணங்களை தணிப்பதாகவே இருக்க வேண்டும், அதுவும் இந்த நாட்டை தூய்மைப்படுத்தக்கூடிய ஒரு செயல்தான் எனத் தெரிவித்தார்.