புதிய அரசமைப்பை இயற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்-சபாநாயகர்

புதிய அரசமைப்பை இயற்றுவதற்கு நாடாளுமன்றத்தால் வழங்கப்பட வேண்டிய முழுப் பங்களிப்பையும் வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். இதற்கு எதிரணிகளும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என நம்புகின்றோம் என  சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

நாட்டில் பலமான ஆளுங்கட்சி உள்ளது. எனவே, புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்து அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தால், சட்டவாக்க சபையில் அதனை நிறைவேற்றிக்கொள்வதற்குரிய பங்களிப்பை வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்  என ஊடகங்களிடம் அவர் கருத்து தெரிவித்தார்.

புதிய அரசமைப்பு அவசியம் என நாட்டு மக்களும் கருதுகின்றனர். இதற்குரிய மக்கள் ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்குரிய பொறுப்பு உள்ளது. இது தொடர்பிலும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். புதிய அரசமைப்பை இயற்றுவதற்கு எதிர்க்கட்சிகள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என நம்புகின்றோம் எனத் தெரிவித்தார்.