பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் இன்று காலமானார்.

பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் உடல்நலக் குறைவால் தமது 80வது வயதில் இன்று காலமானார்.

கேரள திருச்சூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

தென்னிந்திய அளவில் பிரபலமான பின்னணிப் பாடகராக அறியப்பட்டவர் மலையாளத் திரையுலகை சேர்ந்த பாடகர் பி.ஜெயச்சந்திரன்.

தமிழில் மூன்று முடிச்சு, அந்த 7 நாட்கள், வைதேகி காத்திருந்தாள், இணைந்த கைகள் உள்ளிட்ட பல படங்களில் வசந்தகால நதியினிலே, கவிதை அரங்கேறும் நேரம், காத்திருந்து காத்திருந்து, அந்திநேர தென்றல் காற்று போன்ற பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் சுமார் 16,000 பாடல்களைப் பாடியுள்ளார்.

சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய திரைப்பட விருது, கேரள மாநில திரைப்பட விருதுகள், கேரள அரசின் ஜே.சி. டேனியல் விருது மற்றும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது உள்ளிட்டவற்றைப் பெற்றுள்ளார்.

நான்குமுறை தமிழ்நாடு மாநில விருதுகளை பாடகர் ஜெயச்சந்திரன் வென்றுள்ளார்.