உக்ரைன் வழியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வழங்கப்பட்ட  ரஷ்ய எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான ஐந்தாண்டு எரிவாயு போக்குவரத்து ஒப்பந்தம் ஜனவரி 1 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போருக்கு மத்தியில் ஒப்பந்தத்தை நீட்டிக்கப் போவதில்லை என்று கைவ் பலமுறை கூறியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் எரிசக்தி மந்திரி ஜெர்மன் கலுஷ்செங்கோ ஒரு அறிக்கையில், ‘ரஷ்ய எரிவாயு போக்குவரத்தை நாங்கள் நிறுத்தினோம்’ என்று கூறினார்.

இது ஒரு வரலாற்றில் மக்கிய விடயம் என்றும், ரஷ்யா அதன் சந்தைகளை இழக்கிறது என்றும் அது நிதி இழப்புகளை சந்திக்கும் எனத் தெரிவித்தார். ஐரோப்பா ஏற்கனவே ரஷ்ய எரிவாயுவை கைவிடும் முடிவை எடுத்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். ரஷ்ய எரிவாயு நிறுவனமான Gasprom, நிறுத்தத்தால் எரிவாயு விற்பனையில் 5 பில்லியன் அமெரிக்கடொலர் அளவிற்கு இழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.