22 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்பு.

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

இதன்படி, பிரதமராக ஹரினி அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

கலாநிதி ஹரினி அமரசூரிய – கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விஜித ஹேரத் – வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சந்தன அபேரத்ன – பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார – நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சரோஜா சாவித்திரி போல்ராஜ்- பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கே.டி.லால்காந்த – விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அனுர கருணாதிலக்க – நகர அபிவிருத்தி மற்றும் நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இராமலிங்கம் சந்திரசேகர் – கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சராக நியமிப்பு.

உபாலி பன்னிலகே – கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுனில் ஹதுன்நெத்தி – கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனந்த விஜேபால – பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிமல் ரத்நாயக்க – போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி – புத்த சாசனம், மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ – சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமந்தா வித்யாரத்ன – பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுனில் குமார் கமகே – இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வசந்த சமரசிங்க – வர்த்தகம், வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன – விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ – தொழிலாளர் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொறியியலாளர் குமார் ஜெயக்கொடி – எரிசக்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியர் தம்மிக்க படபெதி – சுற்றுச்சூழல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.