பொதுத் தேர்தல்: யாழ் மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி
யாழ் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் பிரதீபன் தெரிவித்துள்ளார். வாக்குப் பெட்டிகள், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தில் இருந்து இருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
வாக்குச் பெட்டியை ஏற்றியவாறு முதலாவது பேருந்து இன்று காலை 8.30 மணிக்கு புறப்பட்டுள்ளது. இதன்போது, யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஸன் சூரியபண்டார ஆகியோர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், யாழ். மாவட்டத்தில் 4 லட்சத்து 92 ஆயிரத்து 280 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும்,. கிளிநொச்சியில் ஒரு லட்சத்து 907 வாக்களர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும், தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, வாக்களிப்பு வியாழக்கிழமை நாளை காலை 7 மணியில் இருந்து மாலை 4 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கெண்ணும் நடவடிக்கைகள் யாழ் மத்திய கல்லூரியில் நாளை மாலை ஆரம்பிக்கப்படும். அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.