நாளைய தேர்தலில் தெரிவாகும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்.
பத்தாவது நாமாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் முதலாவது அமர்வு நவம்பர் மாதம் 21ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறும் என ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாவது நாடாளுமன்றத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்வுதற்கான பொதுத் தேர்தல் நாளை 14ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் மூன்று அமைச்சர்களுடனான உலகின் மிகச்சிறிய அமைச்சரவை இறுதியாக நேற்று கொழும்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இவ்வாறு அமைச்சரவை கூடியது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பதவியேற்கும் குழுவுடன் புதிய அமைச்சரவையை நியமிக்கப்படவுள்ளது.
அதற்கு முன்னர் கூடிய இறுதி அமைச்சரவை கூட்டம் இதுவாகும். நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் புதிய அமைச்சரவையை அமைக்கும் வரையில் மீண்டும் ஒரு அமைச்சரவை கூட்டம் இடம்பெறாது என்பதும் குறிப்பிடத்தக்கது.