நவீன் ராம்கூலம் மூன்றாவது முறையாக மொரீசியஸ் பிரதமராக பதவியேற்கிறார்
மொரிஷியஸ் நாட்டில் கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நவீன் ராம்கூலம் வெற்றி பெற்றுள்ளார். நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 70 உறுப்பினர்களில் 62 பேர் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்.
பிரதான எதிர்க்கட்சியான முன்னாள் பிரதமர் டாக்டர் நவீன் ராம்கூலம் தலைமையிலான தொழிலாளர் கட்சி மற்றும் மொரிஷியன் ஆயுதப்படை இயக்கம், நோவியாவ் ஜனநாயகத்தினர் கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது. நவீன் ராம்கூலம் மூன்றாவது முறையாக மொரீசியஸ் பிரதமராக பதவியேற்கிறார்.