அரசியல் போர் தொடுக்க கூடியவர்களையே நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்’: அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவிப்பு

நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் சர்வதேசத்திலும் குரல் கொடுக்க கூடியவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்புதல் வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவர் இன்று நேற்று  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இதனைத்  குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியை கேடயமாகக் கொண்ட மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்றத்தை தமதாக்குவதற்கு முன்பே வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக தேசிய அரசியலுக்கு எதிரான போரை ஆரம்பித்துள்ளது. தற்போதைய ஜனாதிபதி தனது பதவிக்கதிரையில் அமரும் முன்பே ‘யுத்த குற்றங்கள் தொடர்பாக உள்நாட்டிலேயே விசாரணை நடக்கும். ஆனால் எவரும் தண்டிக்கப்பட மாட்டார்கள்’ என்றார். அதிபர் பதவியில் அவர் அந்த பின் அமைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பின்பற்றி  ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51ஃ1 தீர்மானத்தை ஏற்க மாட்டோம்’ எனக் கூறினார்.

அவரே தற்போது ‘சமஸ்டி தீர்வுக்கு இடமே இல்லை’ எனவும் கூறியுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா அவர்கள் ’13 திருத்தமும் அதிகாரப் பகிர்வும் வடக்கு மக்களுக்கு தேவை இல்லை. பொருளாதாரப் பிரச்சினைக்கான தீர்வே அவசியம்’ என்றார். இவை எல்லாம் தமிழர்களை அரசியல் போருக்கு அழைப்பதாகவே பொருள்கோடல் வேண்டும். இவற்றிற்கு எதிராக அரசியல் போர் தொடுக்க கூடியவர்களையே எம் தேசத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.