கனடாவில் இந்து கோவில் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்

கனடாவில் இந்து கோவில் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தாக்குதல், திட்டமிட்ட தாக்குதல் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது என்றும் இந்தியப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையில் இராஜதந்திர மட்டத்தில் பிரச்சினையான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் இரு நாட்டு இராஜதந்திர அதிகாரிகளையும் வெளியேற்ற அந்த நாடுகள் நடவடிக்கை எடுத்திருந்தன.

இவ்வாறான நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கனடாவின் பிரம்டன் நகரில் உள்ள இந்து ஆலயம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான முறுகல் நிலை மேலும் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.