தமது அரசாங்கத்தை ஒருபோதும் கவிழ்க்க முடியாது – ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க

ஜனாதிபதி தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தி பற்றி பொய்யான அவதூறுகளை எழுப்பி மக்களை தவறாக வழிநடத்திய அரசியல்வாதிகளுக்கு இன்று பொதுக்கூட்டம் கூட நடத்த முடியாதுள்ளது. ஏனென்றால் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் என்ன பதிலளிப்பார்கள்? தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு மூன்று வாரங்களும் மூன்று மாதங்களுமே இருப்பதாக கூறுகிறார்கள்.

அவர்கள் மக்களை திசைதிருப்புவதற்கு முயற்சிக்கிறார்கள்.
ஜனாதிபதித் தேர்தலின் போது,பலவீனமான அரசியல்வாதிகளே தேசிய மக்கள் சக்தியை அவதூறhகப் பேசினர்.ஆனால் அவை அனைத்தும் பொய்யானவை என்பதை பொதுமக்கள் அடையாளம் கண்டுகொண்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றால் நாட்டில் வன்முறை ஏற்படும் என்றார்கள். ஆனால் அவ்வாறொன்றும் இடம்பெறவில்லை. இனிமேல் இதுபோன்ற அரசியலை அனுமதிக்க மாட்டோம்.இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என நுவரெலியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க இதனைத் கூறினார். 25 அமைச்சர்கள் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான பிரதி அமைச்சர்கள் கொண்ட அரசாங்கத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கும்,  சக்தி வாய்ந்த நாடாளுமன்றத்தை உருவாக்கி மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம்’ என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.