கனடாவில் கொள்ளைச் சம்பவம் :  யசந்தன் கந்தையா என்ற தமிழரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டதாக தகவல்

கனடாவின் நோபல்டன் நகரில் வீடொன்றில் கடந்த வாரம் நிகழ்ந்த கொள்ளை சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பகல் நேரத்தில் இடம்பெற்ற இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் யோர்க் பிராந்திய பொலிஸார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர். இந்நிலையில், சம்பவ இடத்தில் இருந்து தப்பி செல்ல முயன்ற இரண்டு சந்தேக நபர்கள் அங்கிருந்த பொலிஸாரின் வாகனம், பொது மக்களின் வாகனங்கள் மீதி மோதி சென்றதாகக் கூறப்படுகிறது.

எனினும், இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்பட்டதா என்ற விபரங்கள் வெளியாகவில்லை. இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதானவர் யசந்தன் கந்தையா என அடையாளம் காணப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக 10 குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொண்டுள்ளார்.

கைது செய்யப்படும் போது இவருக்கு எதிராக தடை உத்தரவுகள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்வபத்துடன் தெடர்புடைய இரண்டாவது சந்தேக நபரின் விரிவான விபரங்கள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.