தமிழக அரசியல்வாதிகளுக்கு, தேசிய பார்வை வர வேண்டும் :லண்டனில் அண்ணாமலை கருத்து
தேசிய கட்சி தான் மாநிலத்தில் இருக்க வேண்டும். அந்த கட்சியால் தான், மாநிலங்களுக்கு வளர்ச்சி கிடைக்கும். தமிழகத்தின் பிரச்னைகளை, உலகப் பிரச்னைகளாக பார்க்கிறோம். இதற்கு தேசிய கட்சி தமிழகத்தில் வேண்டும். தமிழகத்தில் பிறக்காத பிரதமர், அந்த மாநிலத்தின் மீது அக்கறை கொண்டுள்ளார் லண்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல்வாதிகளுக்கு, தேசிய பார்வை வர வேண்டும். ஆட்சி யில் இருப்பவர்களுக்கு இரு மொழி கொள்கை மட்டும் தான். புதிதாக கட்சி ஆரம்பிப்பவர்களும் அதையே பேசுகின்றனர். கடந்த 60 ஆண்டு கட்சியும்இ அதையே பேசுகிறது. அவர்களுக்கு புரிய வேண்டும், மக்களின் பார்வை மாறிவிட்டது.புதிதாக கட்சி ஆரம்பிப்போர், தேசிய பார்வையுடன் கட்சி ஆரம்பித்தால், முதல் பாராட்டு எங்களுடையது தான்.
மாநில கட்சிகள் பின்னோக்கி செல்கின்றன.ஆட்சியில் உள்ள ஒரு அரசு, இரு மொழி தான் வழங்குவோம்; 3வது மொழி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தர மாட்டோம் என்று கூறுகிறது. இது, அகங்காரம். கட்சியை பிடிக்கவில்லை என்றாலும், தலைவர்களை பார்த்து ஓட்டளிக்க வேண்டும். தமிழகத்தில் மாற்றம் வர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.