ஈழத்தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

- காவியா -

கடந்த 2014வரை இந்தியாவில் மத்திய அரசாக காங்கிரஸ் ஆட்சியும், இந்தியா அரசியலின் முதுகெலும்பான மத, மொழி, சாதிய அரசியலும் ஈழத்தமிழர்களாகிய எம்மையும் புரட்டிப் போட்டுவிட்டது.

 

ஈழத்தமிழர்களாகிய நாம் தமிழ்நாட்டில் உள்ள மொழி,சாதிய அரசிலுக்குள் எம்மை அறியாமலே சிக்கிக் கொண்டதாலும், தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய மாநிலங்களிலும், வடமாநிலத்திலும் இருந்த மத அரசியலைப் புறந்தள்ளி நின்றாலும் தேரவாத பௌத்த இனவாத இனப்படுகொலை அரசால் எம்மை இலகுவாக இனப்படுகொலை செய்து இனவழிப்பை மேற்கொள்ள முடிந்தது.

 

சிங்கள இராசதந்திரிகள் வடஇந்தியா சென்று டில்லியில் உள்ள இந்திய அதிகார வர்க்கத்திடம், தமிழ்நாட்டில் உள்ள, ஏனைய மாநிலங்களில் உள்ள கொள்கை வகுப்பாளர்களிடமும் தம்மை பௌத்தர்களாகவும், கொய்கம உயர்சாதியினராகவும் நல்லுறவைப் பேணி காலத்திற்குக் காலம் தமது நலனைப் பெற்றுக் கொண்டனர்.

அத்துடன் ஈழத்தமிழர்களாகிய எம்மைப் தமிழ்நாட்டில் உள்ள அரசியலுடன் ஒப்பீடு செய்து மதமற்ற,மொழியுடன் இணைத்து பேசி கருத்துருவாக்கம் செய்தனர். அதுமட்டுமன்றி ஈழத்தமிழர்களாகிய எம்மை இந்தியாவின் கொள்கை வகுப்பில் முக்கிய பங்காற்றும் பிராமணிய வர்க்கத்தின் எதிர்ப்பாளர்களாகவும் காட்டினர். அதுமட்டுமல்ல தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற அமைப்பை கிறிஸ்தவ அமைப்பாகவும் சித்தரித்தனர். ஈழத்தமிழர்களாகிய எம்மை காட்டுமிராண்டிகளைப் போலவும் நாகரீகமற்றவர்கள் என்றும், மாட்டினை உரித்து உணவுக்காக பயன்படுத்தும் மக்கள் கூட்டமே ஈழத்தமிழர்கள் என்றும் தகுந்த தகுந்த இடங்களில் கருத்துருவாக்கம் செய்தனர்.

 

அதுமட்டுமன்றி வடமாகாணத்தில் இருந்த சோனகர்களை மக்களை அவர்களை நிலங்களை விட்டு வெளியேற்றியமைக்கு மேற்குலக நாடுகளின் விரும்பமாக கூறி போலியான கருத்துருவாக்கத்தை இந்தியாவில் சிங்கள பேரினவாத இனவாத இனவழிப்பு அரசு செய்தது.

கடந்த காலங்களில் இந்திய எதிர்ப்புவாதம், தமிழின அழிப்பு என்பவற்றை மூலதனமாக கொண்டே செயற்பட்டு வந்தது என்பதனை மறைத்தது மட்டுமன்றி,
இதனை இலங்கை அரசானது ஒருபோதும் எங்கும் வெளிக்காட்டாது இந்திய மத்திய அரசுடன் நெருங்கிய நட்பை பேணி அவர்களிடம் இருந்து அனைத்தும் பெற்று ஈழத்தமிழர்களாகிய எம்மை அழித்தனர். நாமும் அழிந்தோம். எமது நிலங்களை இழந்தோம்.

 

சிங்கள தேரவாத இனப்படுகொலை, இனவழிப்பு அரசானது இந்திய அரசுடன் நெருங்கிய நல்லுறவை பேணுவதை தடுக்கவும் அவர்களது இராஜதந்திர ரீதியிலான நகர்வை முடக்கி அவற்றை அறுத்து எறியவும் ஈழத்தமிழர்களாகிய நாம் என்ன செய்தோம் எதுவுமே ஆக்கபூர்வமாக செய்யவில்லை என்பதனை ஏற்றுக்கொள்வோம். இதனை நாம் நிச்சயமாக செய்ய வேண்டும். இதுவே எமக்கான வெற்றியை தரும்.

 

அன்றில் இருந்து இன்றுவரை ஈழத்தமிழர்களாகிய நாம் எதனையுமே செய்யாது, இலங்கை தேரவாத அரசின் முதலீடுகளில் ஒன்றான இந்திய எதிர்ப்புவாதத்தை எமக்குள் விதைத்து அதனையே பேசி உலகெங்கும் பரந்து விரிந்த ஈழத்தமிழர்களாகிய நாம் இன்றும்வரை சிங்கள பேரினவாத இனவாத இனவழிப்பு அரசின் வலைக்குள் விழுந்து எமக்கு தெரிந்தும் தெரியாமலும் அவர்களுக்கே சேவகம் செய்து வருகின்றோம்.

குறிப்பு.
இலங்கை அரசின் இந்திய எதிர்ப்பு
தமிழின அழிப்பின் உதாரணங்கள்.

1)மலையக தமிழர் வெளியேற்றம்.
இலங்கை சிட்டிசன் act15/11/1948
2)ஈழத்தமிழர்களின் மீதான இனப்படுகொலைக்கள்/இனவழிப்பு (1956 இல் இருந்து இன்றுவரை)
இன அழிப்பின் தொடர்ச்சியாக
காணி நில அபகரிப்பு
பண்பாட்டு அழிப்பு
மொழியழிப்பு
3) ஈழத்தமிழர்களுடன் இணைந்திருந்த இடதுசாரிகள் அழிப்பு

இலங்கை அரசின் இராசதந்திர நகர்வுகள்
1) 1977 ஆம் ஆண்டின் பின்னர் முடிவெடுக்கும் சக்தியுள்ள மலையகத் தமிழ் அரசியல்தலைவர்களை, சிங்கள பேரினவாத இனவாத இனவழிப்பு அரசு தமது நெருங்கிய விசுவாசியாக மாற்றி இந்தியாவின் அதிகார மையத்திற்கு இவர்களை தமிழர்கள் என்ற போர்வையில் அனுப்பி தமக்காக இவர்களை இந்தியாவில் பணியாற்றச் செய்து இலங்கை அரசு தமது நலனை அடைந்தனர். இந்த நடைமுறையானது இன்றுவரை தொடர்கின்றது.

2)1989 ஆம் ஆண்டுகளின் பின்னர் JVP சார்ந்த கருத்துக்களைக் கொண்ட பெரும்பான்மை சிங்களத் தலைவர்கள், ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், இவர்களை தமது சேவைக்கான சேவையாளராக இலங்கை தேரவாத இனவாத இனப்படுகொலை அரசு மாற்றியது.
இந்த JVP வின் கருத்துருவாக்கமே சிங்கள இளைஞர்களையும் யுவதிகளையும் இலங்கை அரசின் பாதுகாப்பு துறையில் அதிகளவில் இடம்பெற காரணமானது.
அதுமட்டுமன்றி அன்றைய நாளில் 1978 காலத்தில் அண்ணளவாக 10000 குறைவாக இருந்த இலங்கை இராணுவம் இன்று 350000 வரை உயர இந்த JVPயினரின் பிரச்சாரமே காரணமாகும் (இன்றைய உதாரணம் சரத் வீர சேகர)

3)இலங்கையில் மிக குறைந்த எண்ணிக்கையிலான பூர்வீக தேசிய இனமான ஈழத்தமிழர்களின் முடிவெடுக்கும் அதிகாரமுள்ளவர்களாக கிறிஸ்தவர்களே உள்ளனர் எனக் காட்டி இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் 2009 ஆண்டின் பின்னர் சிலர் மஞ்சள் ஆடையுடன் தம்மை இந்துகள் எனக் கூறி அரசியலை முன்னெடுப்பதனை காணலாம். (உண்மையில் இவர்கள் ஈழத்தமிழர்களாகிய எமது எதிரிகளான சிங்கள இனவாத தேரவாத அரசின் ஊழியர்களே).

ஈழத்தமிழர்களின் தவறுகள்.

ஆயுதப் போராட்டம் வளர்ச்சி பெற்றவுடன் இந்திய மத்திய அரசுடனான உறவை துண்டித்தமை.

ஆயுதப் போராட்ட குழுக்கள் தமக்குள் தாமே சண்டையிட்டமை.

இந்திய மாநிலங்களில் உள்ள உள் அரசியலுக்குள் தலையிட்டமை.

தமிழ்நாட்டு அரசியல்தலைமைகள் தமக்காக குரல்கொடுப்பார்கள் என எண்ணி அவர்கள் வியாபார அரசியலை மேற்கொள்ள களமமைத்துக் கொடுத்தமை.

ஈழத்தமிழர்களுக்கும் இந்தியாவிற்குமான உறவு வெளியுறவுத் துறை சார்ந்தது என்பதனை உணரத் தவறியமை.