எங்களை வைத்து வியாபாரம் செய்வதே அரசியல் வாதிகளின் நோக்கம் – முன்னாள் போராளிகள் குற்றச்சாட்டு
எங்களை வைத்து வியாபாரம் செய்வதே அரசியல் வாதிகளின் நோக்கமாக இருப்பதாக முன்னாள் போராளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட சுயேட்சை குழு தெரிவித்துள்ளது.எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் முன்னாள் போராளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைக்கொண்ட சுயேட்சைக்குழுவானது அரிக்கன் இலாம்பு சின்னத்தில் போட்டியிடுகின்றது.
இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகசந்திப்பு வவுனியாவில் நேற்று இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். மேலும்,வன்னியில் அவையவங்களை இழந்த பலபோராளிகள் உள்ளனர். அன்றாட உணவுக்கே அவர்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
அநாதைகளாக உள்ள அவர்களை இந்த அரசியல் வாதிகள் யாருமே கண்டுகொள்வதில்லை. எம்மை வைத்து வியாபாரம் செய்வதே அவர்களது நோக்கம். எனவே நேரடியாக பாதிக்கப்பட்ட எமக்கே அந்த விடயங்கள் புரியும். எனவே எமது தேவைகளை பூர்த்திசெய்வதற்காக இந்த தேர்தலில் நாம் நிற்கிற்றோம் என்றனர்.