மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்க தயாராகும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.அடுத்த வருடம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்குள் தேசிய பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு அவர் தயாராகவுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய பட்டியலிலும் இல்லாமல், தேர்தலில் போட்டியிடமலும் எப்படி ரணில் நாடாளுமன்றத்திற்கு நுழைவார் என்பது பலரது கேள்வியாகியுள்ளது.எனினும் இம்முறை சிலிண்டர் சின்னத்தில் பொது தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஊடாக ஒன்று அல்லது இரண்டு ஆசனங்களை வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதென கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, சிலிண்டர் ஊடாக நாடாளுமன்றத்திற்கு செல்லும் ஒரு உறுப்பினர் அடுத்த வருடம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதமளவில் அந்த பதவியில் இருந்து விலகி ரணிலுக்கு அந்த ஆசனத்தை வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் இம்முறை பொது தேர்தலில் போட்டியிடப்போவதில்லை எனவும் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு வரப்போவதில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.