முன்னாள் எம்.பிக்களுக்கு வழக்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நீக்கம்!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று (27) முதல் மீள அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, முன்னாள் சபாநாயகர், முன்னாள் பிரதி சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் தவிர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் மீள அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த செவ்வாய்க்கிழமை (24) இரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்றத்தை கலைத்திருந்தார்.
அதன்படி, 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.